அமெரிக்காவில் கொரோனா சோதனையின் வேகத்தைக் குறைக்குமாறு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கூறிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒக்லஹாமா மாகாணம், டல்சா நகரில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும்போது, கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா முழுவதும் இரண்டு கோடியே 50 லட்சம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், இந்த எண்ணிக்கை வேறு எந்த நாட்டையும் விட பல மடங்கு அதிகம் எனத் தெரிவித்தார்.
மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கூறிய ட்ரம்ப், எனவே, கொரோனா பரிசோதனையின் தீவிரத்தைக் குறைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். டிரப்பின் இந்தக் கருத்துக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.