கொரோனா தடுப்புக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் ஆஸ்ட்ராஜெனாகாவின் ((AstraZeneca)) தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்ய பிரேசில் அரசு சுமார் 1000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இந்த தடுப்பூசி தான் இப்போது சோதனைக் கட்டத்தில் உள்ளவற்றில் சிறந்த தடுப்பூசியாக கருதப்படுகிறது.
உலகின் முதல் அதிகாரப்பூர்வ கொரோனா தடுப்பூசியாக இது அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த தடுப்பூசி பெரிய எண்ணிக்கையில் மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருகிறது.