நெருக்கமாக நிற்கும் சந்தர்ப்பங்களில் தாம் முகக்கவசம் அணிவதை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்ட மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் அமெரிக்க அதிபர் முகக்கவசம் இல்லாமல் நிற்கும் புகைப்படங்கள்,வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தமது நிலைப்பாட்டை அறிவித்த டிரம்ப், கொரோனாவைப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவதற்கு தமது முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.
ஆயினும் அமெரிக்காவில் நாடு முழுவதும் முகக்கவசம்அணிவதை கட்டாயப்படுத்தி சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.