உலக சுகாதார நிறுவனம் புகைப்பிடிப்பதால் கொரோனா தொற்று தீவிரமடைந்து உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
புகைபிடிப்பதற்கும், கொரோனா தொற்றுக்கும் இடையேயான தொடர்பு குறித்த 34 ஆய்வுகளை பார்வையிட்டபின் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே சமயம் புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும் கொரோனா இறப்பு விகிதம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை.
அதே நேரம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்களில் 18 சதவிகிதம் பேருக்கு புகைப்பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து குறைவு என கடந்த ஏப்ரலில் பிரெஞ்சு ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. அதை பல விஞ்ஞானிகள் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.