அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஓயாத நிலையில், அந்நாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய கொலம்பஸின் சிலையை ஆர்பாட்டக்காரர்கள் தரையில் சாய்த்து உடைத்தனர்.
காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட George Floyd-இன் மரணத்துக்கு நீதி கோரி, பால்டிமோர் நகரில் நடந்த ஆர்பாட்டத்தின் போது, அங்கு 30 ஆண்டு காலமாக இருந்த கொலம்பஸின் சிலையை கயிறால் இழுத்து கீழே சாய்த்த ஆர்பாட்டக்காரர்கள், அதன் உடைந்த பாகங்களை Patapsco ஆற்றில் வீசி எறிந்தனர்.
கொலம்பஸின் வருகையை தொடர்ந்து நிகழ்ந்த ஸ்பானிய மன்னர்களின் படையெடுப்பால் ஏராளமான பூர்வக்குடி அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, போராட்டக்காரர்கள் அவர் சிலையை உடைத்தனர்.