அமெரிக்க போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 மாலுமிகள் படுகாயமடைந்தனர்.
சாண்டியாகோ கடற்படைத் தளத்தில் ஏராளமான போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் 257 மீற்றர் நீளம் கொண்ட யுஎஸ்எஸ் போன்ஹோம் ரிச்சர்ட் என்ற தாக்குதல் கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக கரும்புகையுடன் நெருப்பு வெளிப்பட்டது.
இதையடுத்து கொழுந்து விட்டெரியும் நெருப்பை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். நெருப்பு மற்றும் புகையில் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த 18 மாலுமிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கப்பற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கப்பலுக்குள் 160 மாலுமிகள் இருந்ததாகவும் எஞ்சியவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருப்பு பற்றியதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.