அமெரிக்காவில் இது வரை 5 கோடி பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், 1.2 கோடி சோதனைகளுடன் இந்தியா அதற்கு அடுத்த 2 ஆம் இடத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்துள்ள அவர், கொரோனா சோதனைகளில் அமெரிக்கா உலகிற்கு முன்மாதிரியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரசை, சீனாவின் வைரஸ் என்று வர்ணித்த அவர், அது சீனாவில் இருந்து வெளியேறி உலக நாடுகளில் பரவ அனுமதித்திருக்க கூடாது என்றார்.தடுப்பூசி சோதனைகளைப் பற்றி குறிப்பிட்ட டிரம்ப்,நாம் எதிர்பார்ப்பதை விடவும் விரைவில் தடுப்பூசி வந்துவிடும் என நம்புவதாக கூறினார்.