எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பங்கேற்கவுள்ளார்.
ஆனால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வொஷிங்டனில் இருந்து விமானம் மூலம் புளோரிடா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ என்ற தனது பிரம்மாண்டமான பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேறவுள்ளார்.
புளோரிடாவின் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான பண்ணைவீட்டில் தங்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் வெள்ளைமாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணைவீட்டில் பணிகளுக்கு அழைத்துச்செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.