வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் கென்னடி ஸ்ட்ரீட் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கி கொண்டனர்.
கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்ட நபரை மீட்கும் பணி ஒன்றரை மணிநேரத்திற்கும் மேல் நீடித்தது.
அதன்பின் அவர் மீட்கப்பட்டார். சுயநினைவுடன் இருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த கட்டிட விபத்தில் கூடுதலாக 4 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.
அவர்களும் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என டி.சி. தீயணைப்பு மற்றும் அவசரகால மருத்துவ சேவைகள் துறை தெரிவித்து உள்ளது.