வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கைப்பற்றிய தலீபான்கள் இறுதியாக தலைநகர் காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், ஆப்கான் முழுமையும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. தலீபான்கள் கட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததையடுத்து, அங்குள்ள மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க வாழ் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது குழந்தைகளுடன் வெள்ளை மாளிகை முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும், ஆப்கானின் இந்த நிலைமைக்கு அவரே காரணம் என்று கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.