அமரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகரித்த கவலையால் ஆசிய பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே ஆரம்பித்தன.
டோக்கியோ, ஹொங்கொங், ஷங்காய், சோல், தைப்பே மற்றும் சிட்னி என அனைத்துப் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் வட்டி வீதம் மேலும் உயர்த்தப்படும். நீண்ட காலத்துக்கு வட்டி அதிகமாகவே இருக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஊழியர் துறை வெளியிட்ட அறிக்கையின்படி பயனீட்டாளர் விலைக் குறியீடு 0.1 வீதம் அதிகரித்துள்ளது. அது 0.1 வீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு வோல் ஸ்ட்ரீட் பெரும் சரிவைச் சந்தித்தது.