அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முத்தரப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டை ஹவாயில் நடாத்தியுள்ளன.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்ரின், அவுஸ்திரேலியப் பிரதிப் பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஹமடா யசுகசு ஆகியோர் பங்குபற்றியுள்ள இக்கூட்டத்தில், தாய்வான் நீரிணையின் பாதுகாப்பு நிலமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்பு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து–பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையை நிலைநிறுத்துவதற்காக உறுதியானதும், நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கைகளை ஒன்றாக முன்னெடுப்பதற்கு மூன்று நாடுகளது பாதுகாப்பு அமைச்சர்களும் இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.