குறித்த சில நாட்களுக்கு முதல் தமது நாட்டுக்குள் மெக்சிகோ வழியாக குடிபெயரும் அகதிகளுக்கு தடையை அமெரிக்க விதித்து இருந்த நிலையில் இப்போது அதே பாதையில் வந்த மக்கள் அமெரிக்காவினுள் வெறும் மொபைல் செயலி பயன்படுத்தி உள்ளே நுழைந்துள்ளனர்.
இவர்கள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி முதல்முறையாக அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அமெரிக்காவிற்குள் நுழைய தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டதையடுத்து, வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவின் வடக்கு எல்லையில் இருந்து, புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர்.
அமெரிக்காவுக்குள் நுழைய பல மாதங்களாக மெக்சிகோ எல்லையில் காத்திருந்த நிலையில், மொபைல் ஆப் மூலம் தங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்ததாகக் கூறினர்.