உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk), ட்விட்டரை அண்மையில் கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி, தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது ட்விட்டருக்கு போட்டியாக புதிதாக ‘ப்ளூஸ்கை’ (Bluesky) என்ற சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அப்பிள் இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்தச் செயலி, மிக விரைவில் அண்ட்ரொய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது.