கடந்த 3ஆம் திகதியன்று, மெக்சிகோவின் வடகிழக்கு மாநிலமான தமௌலிபாஸில் உள்ள மாடமோரோஸ் நகரில் வைத்து துப்பாக்கிமுனையில் அமெரிக்கர்கள் நால்வர் கடத்தப்பட்டனர்.
மேற்படி கடத்தல் சம்பவத்தின் போது, மெக்சிகோ நாட்டுப் பெண் ஒருவரும் உயிரிழந்தார்.
குறித்த அமெரிக்கர்கள், ஒப்பனை அறுவை சிகிச்சைக்காக பயணம் செய்ததாக அவர்களது உறவினர்கள், அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இவர்களில் இருவர் இறந்துவிட்டனர் என மெக்சிகோ மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ மாநில ஆளுநர், “நான்கு அமெரிக்கர்களில், இருவர் இறந்துவிட்டனர், ஒருவர் காயமடைந்துள்ளார், மற்றவர் உயிருடன் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மரணத்தை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதேவேளை, மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் (Andrés Manuel López Obrador) இந்தச் சம்பவத்தை “ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான மோதல்” என்று விவரித்தார்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில், மெக்சிகோ மற்றும் அமெரிக்க மத்திய அரசு ஆகியன விசாரணை செய்து வருகின்றன.