அமெரிக்கா – நியூயோர்க் நகரின் ரொச்செஸ்ட்டர் (Rochester) பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இருவர் மரணித்துள்ளனர்.
அத்துடன், இந்த சன நெரிசலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
ராப் பாடகி GloRilla நடத்தி முடித்த இசை நிகழ்ச்சிக்குப் பின்னரே இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக நினைத்த மக்கள், அங்கிருந்து வெளியேற விரைந்த போது நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், துப்பாக்கிச் சூடு நடந்தமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி சன நெரிசல் சம்பவத்துக்கு முன்னதாகவே பாடகி GloRillaவின் இசை நிகழ்ச்சி முடிந்துவிட்டதாக BBC அறிக்கையிட்டுள்ளது.
அதைப் பற்றி அங்கிருந்து கிளம்பிய பிறகே அவருக்கு தெரியவந்ததாகவும் அதனால் GloRilla மனமுடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.