0
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை 76 வயது ட்ரம்ப் மறுத்துள்ளார்.
உறவு இருந்ததாகக் கூறப்படும் தகவலை மறைப்பதற்காக ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்குப் பணம் கொடுத்ததன் தொடர்பில் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.அவர் மோசடி செய்ததாகவும் அவற்றில் சிலவற்றை வரி தொடர்பில் தவறாகச் சித்தரித்ததாகவும் குற்றச்சாட்டு கூறுகிறது.
நியூயோர்க் நகரில் அவை கடுமையான குற்றச்சாட்டுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்று நீதிபதி கூறினார். 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டிகளும் அப்போதுதான் ஆரம்பமாகவுள்ளது. நியூயோர்க் நகர நீதிமன்றத்திற்கு வந்திருந்த ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அமைதியாகக் கேட்டார். அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்த பின்பு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.