விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும், சரக்கு ரயிலின் 23 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரக்கு ரயில் விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், விபத்து குறித்து பொலீசார் விசாரித்து வருகின்றனர். தடம் புரண்ட ரயிலின் உருக்குலைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.