அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தனது 23 வயதுடைய சகோதரியை 14 வயதுடைய சிறுவன் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
14 மற்றும்15 வயதுடைய இரு சகோதரர்களிடையே கிறிஸ்மஸ் பரிசு தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 14 வயதுடைய சிறுவன் கைத்துப்பாக்கியை எடுத்து அதை தன் சகோதரனை நோக்கி, தலையில் சுடப் போவதாகக் கூறியுள்ளார்.
இதைக்கண்ட அவரது மூத்த சகோதரி, அதனை தடுத்த நிலையில், 14 வயது சிறுவன் தனது சகோதரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியுள்ளார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட பெண், இளம் தாய் ஆவார்.
துப்பாக்கி சூட்டுக்கு காரணமான 14 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.