அர்ஜென்டினாவின் தலைநகரான போனஸ் அயர்ஸில் தற்போது புதிய நெருக்கடி தோன்றியுள்ளது.
அதாவது, Buenos Aires நகர் முழுவதையும் நுளம்புகள் ஆக்கிரமித்துள்ளன.
நகர் முழுவதும் சூழ்ந்திருக்கும் நுளம்புகளின் வீடியோக்களை பொதுமக்கள் பலரும் தமது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்ததாக CNN செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
https://www.instagram.com/reel/C3vOMAGMmV-/?utm_source=ig_web_button_share_sheet&igsh=ZDNlZDc0MzIxNw==
பருவநிலை, சுற்றுச்சூழலைப் பொருத்து 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
நுளம்புகள், சுமார் 20 நாள் வரை உயிர்வாழக்கூடியவை. அதனால் அந்தச் சூழல் சில வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து, நுளம்புகளை விரட்டுவதற்கான திரவம், Buenos Aires நகர் பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்று அர்ஜென்டினா அரசாங்கம் அறிவித்துள்ளது.
நுளம்புகளின் பாரிய இனப்பெருக்கம், அர்ஜென்டினாவின் தலைநகரான போனஸ் அயர்ஸில் டெங்கு நோய் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளது.