அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடனே போட்டியிடுவார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை பைடனும் (81 வயது), குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பும் (78 வயது) நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். அதில் பைடன் தடுமாறினார். ஜனாதிபதித் தேர்தலிலிருந்து பைடன் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
கடந்த சில நாள்கள் சவால்மிக்கதாய் இருந்தன என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கேரைன் ஜீன் பியர் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியமானவர்களை பைடன் சந்தித்துப் பேசினார்.
பைடன் மீண்டும் ஜனாதிபதியாக எடுக்கும் முயற்சிகள் அபாயத்தில் உள்ளன என்று New York Times அறிக்கை குறிப்பிட்டிருந்தது. அதை மறுத்த வெள்ளை மாளிகைப் பேச்சாளர், அது முற்றிலும் தவறு என்றார்.