அமெரிக்கா, வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கியுடன் நடமாடிய நபர் ஒருவரை உளவுத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது பலத்த கண்காணிப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எவருக்கும் காயம் இல்லை.
இந்தச் சம்பவம், அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லைமல், புளோரிடா இல்லத்தில் வார இறுதியைக் கழித்துக் கொண்டிருந்துள்ளார்.
இண்டியானாவில் இருந்து தற்கொலை நோக்கத்துடன் ஒருவர் வாஷிங்டன் செல்வதாக, உளவுத் துறைக்கு உள்ளூர் அதிகாரிகள் தகவல் கொடுத்தமைக்கு அமைவாக மேற்படி நபர் சுட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை அருகே குறித்த சந்தேகநபரை, உளவுத் துறை அதிகாரிகள் அணுகிய போது, அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாஷிங்டன் நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.