இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும் தடுக்கும் திறனோடு அதன் தப்பிக்கும் ஸ்பைக்ஸ் ஜீனை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா வைரஸ், சீன வைரசைக் காட்டிலும் அதிக பரவுதல் வேகம் கொண்டது.
இங்கிலாந்து கொரோனா வைரசின் ஸ்பைக்ஸ் ஜீன் நோயெதிர்ப்புத் திறனில் இருந்து மறைந்து கொள்ளும் தன்மையுடையதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.