நம் குடும்பத்தின் ஆரோக்கியம் சமையலறையில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல, வீட்டின் பாதுகாப்பிலும் கிச்சன் பராமரிப்புக்கு பங்குண்டு. உங்கள் வீட்டுக் கிச்சனை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் கையாள சிறந்த ஆலோசனைகள்.
சமையலறை டைல்கள்
சமையல் மற்றும் அதனால் ஏற்படும் சூடு காரணமாக டைல்களில் அதிக அழுக்கு ஏற்படுகின்றது. இதை சுத்தம் செய்வது மிகவும் எளிது. 1 ஸ்ப்ரே பாட்டிலில் 1 கப் வினிகருடன் (Vinegar) ஒரு 1 ¼ கப் பேக்கிங் சோடாவை கலக்கவும். இந்த திரவத்தை டைல்களின் மீது தெளித்து பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். அழுக்கு போகவில்லை என்றால், கரைசலில் ½ கப் திரவ சோப்பை சேர்க்கவும்.
உங்கள் வென்டை எவ்வாறு சுத்தப்படுத்துவது
உங்கள் சமையலறை வென்ட்டில்தான் அதிக எண்ணெய் படிந்து (Oil) விடுகிறது. இது கெஸ் அடுப்புக்கு மேலே இருப்பதால், உஷ்ணத்தால், எண்ணெய் அப்படியே திடமாக ஒட்டிக்கொள்கிறது. வெண்டை வெளியே எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெண்டை போடுங்கள். படிப்படியாக அதில் 4 கப் பேக்கிங் சோடா சேர்க்கவும். ஒரே நேரத்தில் அதிகமாக கலக்க வேண்டாம். இந்த கலவையை 60 விநாடிகள் கொதிக்க விடவும். உங்களிடம் உள்ள பாத்திரம் சிறியதாக இருந்தால், வெண்டை புரட்டி, ஒவ்வொரு பக்கமும் 60 விநாடிகள் கலவையில் இருக்கும்படி செய்யுங்கள். அதன் பிறகு வெண்டில் உள்ள எண்ணெய் பசை முழுதும் நீங்கிவிடும்.
சாப்பிங்க் போர்டை எப்படி சுத்தம் செய்வது
மர பலகைகள் காய்கறி வெட்டுவதற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றின் நுண்ணிய மேற்பரப்பு காரணமாக இவை மிக விரைவாக கறைபட்டு, இவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. முதலில் பலகையில் உப்பை தெளிக்கவும். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து பாதியாக வெட்டவும். உப்பை எலுமிச்சை (Lemon) பழத்தை பயன்படுத்தி பலகை முழுவதிலும் பரப்பி நன்றாகத் தேய்க்கவும். கரைகளும் துர்நாற்றமும் விலகி சாப்பிங் போர்ட் பளபளக்கும்.
அடிபிடித்த பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்வது
பலமுறை நாம் அடுப்பில் ஏதாவது வைத்து விட்டு மறந்து விடுகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் பாத்திரம் அடிபிடித்து விடுகிறது. இவற்றை எளிதாக சுத்தம் செய்யலாம். அடி பிடித்த பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் மற்றும் 1 கப் வினிகர் சேர்க்கவும். கரைசலை கொதிக்க விடவும். தித்ததும், அதை கேஸிலிருந்து இறக்கி, கிச்சன் சிங்கில் வைத்து, அதில் 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்க்கவும். கலவை உறைவது நின்றவுடன், பாத்திரத்தை காலி செய்து கடினமான பிரஷ் கொண்டு பாத்திரத்தை தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
சமையலறை சிங்கை எப்படி சுத்தம் செய்ய
சிங்கில் இருந்து பிசுபிசுப்பு கிரீஸை அகற்ற, சூடான நீரை பல முறை பாய்ச்ச வேண்டும். பின்னர் ஒரு கப் வெள்ளை வினிகரைச் சேர்த்து, சிறிது பேக்கிங் பவுடர் சோடாவுடன் சுத்தம் செய்யுங்கள். உங்கள் சிங் சுத்தமாக பளபளப்பாக ஜொலிக்கத் துவங்கும்.
மேற்கண்ட சமையலறை பராமரிப்பு ஆலோசனைகளை இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல், இல்லத்தரசர்களும் கடைப்பிடிக்கலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தை கிச்சனில் இருந்தே துவங்கலாம்!
நன்றி : zeenews.india