நெருக்கடி நிலையை அமுல்படுத்தியது முற்றிலும் தவறானது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும் அமெரிக்காவின் கர்னல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கௌசிக் பாசுவுடன் கலந்துரையாடிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “முன்னாள் பிரதமரும் தனது பாட்டியுமான இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தியது முற்றிலும் தவறானது” எனக்கூறியுள்ளார்.
நெருக்கடி நிலை குறித்து உங்கள் பார்வை என்ன என்று பேராசிரியர் கெளசிக் ராகுல் காந்தியிடம் வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், “ நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்ற முயற்சித்ததில்லை.
நேர்மையாக சொல்வது எனில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த திறனும் கிடையாது. எங்களுடைய அமைப்பு அதை அனுமதிக்கவும் செய்யாது. ஆர்எஸ்எஸ் அடிப்படையிலேயே வித்தியாசப்படுகிறது. அரசு அமைப்புகளில் அவர்களது ஆட்களை ஆர்.எஸ்.எஸ். நிரப்புகிறது.
பா.ஜ.க.வைத் தேர்தலில் தோற்கடித்தாலும் அரசு அமைப்பு முறையிலிருந்து அவர்களை எங்களால் வெளியேற்ற முடியாது என தெரிவித்தார்.