தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதியாகியுள்ளது. அதன்படி திமுக 174 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை திமுக இன்று மதியம் வெளியிடுகிறது. அதேபோல திமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திமுக 174 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மாா்க்சிஸ்ட் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளிலும், மதிமுக 6 தொகுதிகளிலும், விசிக 6 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 3 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 1 தொகுதிகளிலும், ஆதி தமிழா் பேரவை 1 தொகுதிகளிலும், மக்கள் விடுதலை கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.