0
டெல்லி: பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில் இன்று முதல் 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வங்களாதேசம் செல்கிறார். வங்களாதேச தேசிய தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார். கொரோனா பரவ தொடங்கிய பிறகு முதன் முதலாக பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.