புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்ட மாஅதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை இரத்துச் செய்துள்ளார்.
சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செத்திய குணசேகர வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தப் பதவி நிலை இரத்துசெய்யப்படுதல் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி சட்ட மாஅதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் இனி செயற்பட மாட்டார்கள். முன்னைய சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்ன செயற்பட்டார்.
தப்புல டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்ன, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளிலிருந்து விலகிக்கொண்டார்.