தமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கி இறந்தார். அவர் வாழ்க்கை கதை பல மொழிகளில் படமாகியுள்ளது.
இந்தியில் ‘டர்டிபிக்சர்’ என்ற பெயரில் வந்து வெற்றிகரமாக ஓடியது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்து இருந்தார். இதற்காக அவர் தேசிய விருது பெற்றார்.
மலையாளத்தில் ‘கிளைமாக்ஸ்’ என்ற பெயரில் தயாரானது. அங்கு சில்க் வேடத்தில் சனாகான் நடித்தார். கன்னடத்திலும் இப்படத்தை எடுத்தனர்.
தற்போது மராத்தியிலும் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சமீர்கான் இயக்குகிறார். இவர் இந்தி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் கூறும் போது, ‘‘சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து பல மொழிகளில் படங்கள் வந்துள்ளது. அவை வெவ்வேறு கோணத்தில் இருந்தன. இந்த படம் முழுமையாக இருக்கும். சில்க் ஸ்மிதா குடும்பத்தினரை சந்தித்து இந்த படத்தை எடுப்பதற்கான அனுமதியை வாங்கி விட்டேன். சினிமாவில் சில்க் ஸ்மிதா பட்ட கஷ்டங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்கும். மராத்தி முன்னணி நடிகை ஓருவர் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பார்’’ என்றார்.