தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்பட சில படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கர்நாடகத்தைச் சேர்ந்தவரான இவர், அங்கு முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்தபோது, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரான குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்குமிடையே காதல் ஏற்பட்டது. அதனால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் குமாரசாமி.
அதனால் பின்னர் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு, இல்லத்தரசியானார் குட்டி ராதிகா. அவர்களுக்கு சாமிகா என்றொரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை தற்போது ஓரளவு வளர்ந்து விட்டதால் 5 ஆண்டுகளுக்கு பிறகு, சினிமாவில் மீணடும் நடிக்கத் தொடங்கினார். ஸ்வீட்டி நன்னா ஜோடி என்ற படத்தில் மீண்டும் நடித்த குட்டி ராதிகா, தற்போது ருத்ரதாண்டவா என்ற படத்திலும் நடிக்கிறார்.
இதையடுத்து, குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்குமிடையே விரிசல் விழுந்திருப்பதால்தான் அவர் நடிக்க வந்திருப்பதாக கர்நாடக மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் குட்டி ராதிகா. எங்களது குடும்ப வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. கணவரின் அனுமதியுடன்தான் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறேன். அதனால் நாங்கள் பிரிந்து வாழ்வதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என்று மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.