தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா 4 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 8 (அல்லது தேவைக்கேற்ப),
பூண்டு – 2 பல்,
புளி – கோலி அளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி… அதில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும்.
வைத்தும் ஆறியவுடன் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.
நன்றி-மாலை மலர்