ஜோதிகா முன்னணி நடிகர்களான கமல், ரஜனி, அஜித், விஜய், விக்ரம் போன்றவர்களுடன் நடித்தவர். இவருடன் அதிகமாக நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
மலையாளத்தில் ஹிட்டான ‘ஹௌ ஓல்ட் ஆர் யூ’ படத்தின் தழுவலில் நடிக்கவுள்ளார். மலையாள படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ருவ்ஸே இப்படத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பதுடன் ஜோதிகாவின் கணவராகவே நடிக்கவும் செய்கிறார் சூர்யா.