ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்திய விபசார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். ஓட்டலில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதன் பேரில் அங்கு சோதனை நடத்தியபோது தொழில் அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகையை கையும் களவுமாக பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நடிகை யார் என்பதை வெளியிடாமல் இருந்தனர்.
தற்போது விபசாரத்தில் கைதான நடிகை ஸ்வேதா பாசு என தெலுங்கு இணையதளங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்வேதா பாசு தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ராரா, ரகளை, சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். ஸ்வேதா பாசுவுடன் விபசார புரோக்கர் பாலுவும் கைதானார்.
கைதான ஸ்வேதா பாசு, பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி ஸ்வேதா பாசு விளக்கம் அளித்துள்ளதாக தெலுங்கு இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
அதில் ஸ்வேதா பாசு கூறி இருப்பதாவது:–
என் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை. சினிமா வாழ்க்கை சரியாக அமையவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தேன். எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன.
அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. விடுபடவும் முடியவில்லை. என்னைபோல் பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.