செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

3 minutes read

வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

நல்லூர் திரு விழா shopping list இல வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட ,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல சுளகும் கட்டாயம் இருக்கும்.

சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான் . உயரத்தில கதிரையில இருந்து கொண்டு பிடைக்க ஏலாது . சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை reach பண்ண கஷ்டம் . ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது easy. நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்க எடுக்கிற பெட்டியும் மடக்கின காலுக்கு பக்கத்தில பிடைச்சு கொட்டிற பெட்டியும் வைக்கோணும்.

பொதுவா முன்று நாலு சுளகு வீட்டை இருக்கும். நெல்லுப்பிடைக்க ஒண்டு , புட்டுக்கு ஒண்டு மற்றது மரக்கறி அரிஞ்சு இல்லாட்டி முருங்கை இலை or கீரை புடுங்கிப் போட . எப்பவும் buffer stock ல புதுசு ஒண்டும் இருக்கும்.

பிடைத்தல் , கொழித்தல் அசைத்தல் எண்டு 3 gear இருக்கு , தேவைக்கு ஏத்த மாதிரி use பண்ண வேணும் . அரிசி பிடைக்க top gear ம. புட்டுக்கு second gear ம் பயறு உழுந்துக்கு first gearம் பாவிக்கிறது.

சுளகை கண்டு பிடிச்சவன் ஒரு Genius . சமையலில் சுளகின் வகிபாகம் inevitable. சுளகின் design படி heavy ஆனது அகண்ட அடிப்பக்கத்திலும் உதிர்நத light weight substance நுனிக்கு கிட்டவும் நிக்கும் .

இரண்டு கையாலேம் சுளகை பிடிச்சு
பெரு விரலை விளிம்பிலை வைச்சு நாலு விரலை வெளீல பிடிச்சு சுளகை தட்டி air ல தூக்கி எறிஞ்சிட்டு சுளகை அப்பிடியே ஒரு ஆட்டு ஆட்டி புட்டை கொழிச்சு எடுக்கிறது not an easy task .

குத்தின நெல் -அரிசி பிடைக்கேக்க கையை கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கோணும் கொஞ்சம் கூட உயர எறிய வேணும் ஆனால் புட்டெண்டால் லூசாப்பிடிக்க வேணும் . vertical movement ஐயும் horizontal movement ஐயும் சரியா coordinate பண்ண வேண்டும் மெல்ல கொழிக்க segregation சரியா வரும் .

பிடைக்கறது மட்டும் இல்லை பிடைச்சாப்பிறகு அதை கொட்டிறதுக்கும் ஒரு முறை இருக்கு. சுளகில இருந்து
நுனியால கொட்டிற items ( குருணல்கள் ) அகலமான பெட்டீல நேர போட வேணும் இல்லாட்டி வெளியில கொட்டும் ஆனால்
பாரமன முழுப்பயறு அரிசியை அகண்ட அடியின்டை மூலைப்பக்கத்தால போட வேணும் . கடைசியல கொஞ்சம் வராது , அதை எத்திப் போட வேணும் .

புட்டுக்கு பாவிக்கிற்சுளகை உடனடியா clean பண்ணாட்டி சரி லேசில போகாது . நான் ஒருக்கா நிகத்தால விராண்டப்போய் பட்ட பாடு … Chronic படை படிஞ்ச பனை ஓலை பெட்டி சுளகுகளை ஊற வைச்சுத்தான் கழுவோணும் .

குசினீக்குள்ள கம்பிகள் உயர அடிச்சு நுனியை வளைச்சு அதில தான் line ல சுளகுகள் , பெட்டிகள் எல்லாம் கொழுவி இருக்கும் .

இன்னும் இந்த சுளகு பின்னிறது எப்படி எண்டு விளங்கவில்லை நல்ல ஒரு மொக்கு engineer ஐ கேட்டாத்தான் தெளிவா விளங்ஙகாத மாரி சொல்வான் .

சுளகில கொளிக்கிறதும் ஓரு சுருதி பிசகாத தாளத்தோட செய்யிற வேலை . இதுக்கு ARR அல்லது IR வோ music போட்டதா தெரியேல்லை .

எப்பிடியும் வருசத்துக்கு ரெண்டு சுளகு வேணும் . புது மாப்பிளை வரவேற்பு புட்டோட தான் , கொஞ்சம் ஒலை பிஞ்சு surface rough ஆக அவர் நெல்லுப்பிடைக்க போயிடிவார் . ஓட்டை வந்தோண்ண எங்கடை அம்மாமார் எறிய மனமில்லாமல் அரிஞ்ச மரக்கறி போட எண்டு maximum use பண்ணுவினம் .

கடைசில கஞ்சல் குப்பை கல்லு எண்டு எல்லாத்தையும் சமந்த சுளகு bunker வெட்டும் போது மண்ணையும் சுமந்து எமது போராட்டத்திலும் பங்கு வகித்தது .

சங்க காலத்ததில் இருந்து நாம் இதை அறிந்திருந்தும் இந்த சுளகு பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதாக இல்லை.

கோயிலில அன்னதானத்திற்கு சமைக்கேக்க அடுப்ப எரிய விசுக்கவும் , சோறு எடுத்து படைக்கவும் , பந்தியில அப்பளம் பொரியல் கொண்டு போக எண்டு சுளகின் பயன்கள் அதிகம் .

பிள்ளை பிறந்து துடக்கு கழிக்கேக்க சுளகில பரம்பரை கூறைச்சீலையை போட்டு அதில பிள்ளையை வளத்தி தான் சூரியனுக்கு காட்டிறது tradition .

இதை வாச்சிட்டு Melbourne Jude உடனடியா ஊரில இருந்து ஒண்டை வாங்கி மனிசிக்கு குடுத்தால் வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

சுளகில் புட்டுச்செய்து வாழ்வோரே வாழ்வார் மற்றவர் எல்லாம் food processor ஐ நம்பி ஏமாந்து போவார் என்றும் சொல்லலாம்.

அப்ப அடுத்த பதிவில புட்டை பற்றி கதைப்பமே?

இது ஒரு சுளகு மாண்மியம்

Dr. T. கோபிஷங்கர்
யாழ்ப்பாணம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More