அமெரிக்காவில் இருந்து வெளிவரும் புகழ் பெற்ற போர்பஸ் பத்திரிகை சமீபத்தில் உலகில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை வெளியிட்டது. கடந்த 2013–2014 ஜூன் வரையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அவர்களில் டி.வி. நடிகைகள், வக்கீல்கள், அலுவலக நிர்வாகிகள், முதலானவர்களின் வருமானம் குறித்து தனித்தனியாக விவரங்கள் வெளியிடப்பட்டன.
அவற்றில் டி.வி. நடிகைகளில் சோபியா வெர்காரா (42) என்பவர் ஆண்டுக்கு ரூ.220 கோடி சம்பாதித்து முதலிடத்தை பிடித்துள்ளார். கொலம்பியாவை சேர்ந்த இவர் அமெரிக்கா டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார்.
அதிக அளவு பணம் சம்பாதிப்பதில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.