சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரோமஷன் ஆனவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் அப்படியே கிடைக்கும் படங்களில் சிறு, சிறு, வேடங்களில் தலை காட்டத் தொடங்கினார். அதில் கோலி சோடா திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தப் படத்திற்கு பின்னர் இமான் அண்ணாச்சிக்கு படங்கள் குவிந்து வருகிறதாம்.
அனைத்தும் காமெடி கேரக்டர்தான். தற்போது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர் என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்நிலையில் இமான் அண்ணாச்சியையும் சூப்பர் ஸ்டார் ஆசை விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த பட்டைய கிளப்பணும் பாண்டியா, காதலைத்தவிர வேறொன்றுமில்லை படங்களின் டைட்டிலில் அவரை குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
அதுவும் தன்னுடைய பெயரை டைட்டிலில் போடும்போது “குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்” என்று போடும்படி வற்புறுத்துகிறாராம்.