சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தமிழகத்தில் அரசு தரப்பில் இதுவரை 3.97 கோடி தடுப்பூசிகளும் தனியார் மருத்துவமனைகள் மூலம் 74 இலட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கக் கூடிய தூத்துக்குடி, கடலூர், நெல்லை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த 6 வாரங்களுக்கு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் தொற்றை முழுமையாக தடுக்க முடியும். ஒக்டோபர் மாதத்திற்குள்ளாக அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த தமிழக சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.