செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிளிண்டனின் மகள் செல்சியா பிரசவத்திற்கு ஒபமாவின் பாதுகாப்பு வாகனப் படைகிளிண்டனின் மகள் செல்சியா பிரசவத்திற்கு ஒபமாவின் பாதுகாப்பு வாகனப் படை

கிளிண்டனின் மகள் செல்சியா பிரசவத்திற்கு ஒபமாவின் பாதுகாப்பு வாகனப் படைகிளிண்டனின் மகள் செல்சியா பிரசவத்திற்கு ஒபமாவின் பாதுகாப்பு வாகனப் படை

1 minutes read

அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று ஜனநாயக உறுப்பினர் ஒருவர் நடத்திய வருடாந்திர தொண்டு விழாவிற்குத் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அதிபரான பில் கிளிண்டனும் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டனும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். தங்களது ஒரே மகளின் பிரசவத்தின் மூலம் தாத்தா, பாட்டியாகும் கிளிண்டன் தம்பதிகளை வாழ்த்திய ஒபாமா நியூயார்க் போக்குவரத்து குறித்து பலரும் அச்சுறுத்துவது பற்றிக் குறிப்பிட்டார்.

தான் பயணிக்கும்போது போக்குவரத்து சுமூகமாக நடைபெறுகின்றது என்று கூறிய ஒபாமா செல்சியாவிற்குத் தேவைப்படும்போது போக்குவரத்தில் தாமதம் ஏற்படாமல் இருக்க தனது பாதுகாப்பு வாகனப் படையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

வரும் அக்டோபர் முதல் தேதியில் செல்சியாவின் பிரசவம் இருக்கக்கூடும் என்று கிளிண்டன் தம்பதியர் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஹிலாரி கிளிண்டன் ஒபாமாவின் கீழ் உள்துறை செயலராக பணியாற்றி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More