நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அரசியல் கட்சிகளின் தலைமை கைமாற்றப்படுகின்றமையினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கின்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதேவேளை இக்கூட்டத்தை காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டமை குறிப்பிடத்தக்கது.