2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
வைத்தியசாலைகளும் சுகாதார பணிமனைகளும் இயங்கி செயற்ப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் சமூதாயத்தில் நலிவுற்றவர்களை கவனிக்க வேண்டிய தேவை இருந்தது.
சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என்பனவற்றை நடாத்தியவர்கள் போர் அனத்தத்தின் மத்தியில் அவர்களை இன்னுமோர் பாதுகாப்பான இடத்தை தெரிவு செய்து அவ் இடத்தில் தங்குமிட வசதிகளை அமைத்து அவர்களுக்கான இருப்பிடத்தை வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிநோக்கினர்கள். இந்நிலையங்களை இயக்கியவர்கள் பெரும் பொறுப்போடும் விடா முயற்சியியோடும் முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் போர் வலயத்தில் இருந்து மீளும் வரை செய்த சேவைகள் பலரின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியது ஆகும்.
இந்த வகையில் வன்னேரிக்குளத்தில் சிறப்பாக இயங்கி வந்த முதியோர் இல்லத்து முதியவர்கள் போர் அனர்த்தம் காரணமாக முதலில் புதுமுறிப்பு பகுதியில் இயங்கிய சிறுவர் இல்ல வளாகத்தின் ஒரு பகுதியில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். ஆண், பெண் வயோதியவர்கள் 65 பேருடன் சுமார் 2 மாதங்கள் அப்பகுதியில் தங்கியிருந்தனர்.
போர் வலயம் புதுமுறிப்பு பகுதியை அண்மித்த போது இவர்களும் அங்கிருந்து இடம்பெயர்ந்து கல்மடு பகுதியில் “மனித நேய” அமைப்பின் உதவியுடன் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அங்கும் சுமார் 2 ½ மாதங்கள் இருந்த பின்னர் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய சூழ்நிலை காரணமாக முதியோர் இல்லத்திக்கு சொந்தமான பொருட்களுடன் மயில்வாகனபுரம் பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த இடங்களில் அவர்களுக்கான உணவு சமைத்து வழங்குதல், குடிநீர் வசதியை ஏற்ப்படுத்தி கொடுத்தல், மலசல கூட வசதிகளை வழங்குதல் என பல காரியங்கள் செய்யவேண்டி இருந்தது.
நலிவடைந்த முதியவர்களை இவ்வாறு பாதுகாத்து நகர்த்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்தவர்களில் திரு.பொன்.நித்தியானந்தன் (முன்னாள் கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர்) அவர்களும் திரு. அந்தோனிப்பிள்ளை(சமாதன நீதவான்), திரு. குலநாயகம் என்பவர்களின் பங்கு அளப்பெரியது முதியவர்களின் நலனுக்காக இறுதிவரை அவர்களோடு இருந்தமை மிகவும் பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய மனித நேய கடமையாகும்.
மயல்வயனபுரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தவர்கள் மீண்டும் பதட்டம், அருகில் உள்ள பகுதிகளில் செல்கள் வீழ்ந்து வெடித்தன. வெடி ஓசையின் சத்தமும் போரில் சிக்கி ஓலமிட்டு வெளியேறும் மக்களின் சத்தமும் மீண்டும் இடம்பெயர்ந்து அடுத்த இடத்துக்கு செல்வதாக இருந்தது. மயில்வகனபுரத்தில் இருந்தவர்கள் உடையார்கட்டு பகுதிக்கு நகர்த்தப்பட்டனர்.
உறவயல் பகுதிகளில் இருந்து வந்த செல்கள் காரணமாக மீண்டும் அங்கிருந்து இடம்பெயர்ந்து சுகந்திர புரத்தை வந்தடைந்தார்கள். அப்பகுதியில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்த போது போர் உச்சமாகி இராணுவக் கட்டுப்பட்டு பிரதேசத்துக்குள் வந்தடைந்தார்கள். அங்கிருந்து இரண்டு உழவு இயந்திரங்கள் மூலம் பிரமந்தனாறு பகுதிக்கு இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டார்கள் அங்கிருந்து பேரூந்துகள் மூலம் வவுனியாவிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் நகர்பகுதியில் எதாவது ஓர் இடத்தில் தங்க வைக்க முயற்சி செயப்பட்டது. இந்நாள் வரை பாதுகாக்கபட்ட 65 முதியவர்களில் ஒரு மூதாட்டி அன்றைய தினம் இறந்து போனார். மிகுதி 64 முதியவர்களும் பம்பைமடு அன்னை திரேசா முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
முதியோர் இல்லத்தை நடத்தியவர்கள் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் ஆரம்பத்தில் சேமித்து வைத்ததான் காரணமாக இராணுவக் கட்டுப்பட்டு பகுதிக்கு வரும் வரை உணவுக்காக நெருக்கடியை எதிர் நோக்கவில்லை. ஆனால் கடும் செல்வீச்சு நடந்த ஒரு சில நாட்கள் பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்து அவர்களுக்கான உணவினை சமைத்து வழங்க பராமரிப்பாளர்கள் மிகவும் சிரமப்பட்டதன் காரணமாக ஒரு சில நாட்கள் தேனீருடன் பொழுதைக் கழித்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த முதியவர்களை பாதுகாத்து நகர்த்தியவர்களுக்கு சோர்வும் பதட்டமும் இருந்தாலும் அங்கிருந்த முதியவர்கள் அதனை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வர முன் உள்ள காலங்களில் மலசலம் கழிப்பதற்காக பனங்கூடல் பகுதிக்கு சென்று வந்தனர்.
சாதாரன பொது மக்கள் பதட்டத்துடன் வெளியே வராத சந்தர்ப்பங்களில் அவர்கள் பதட்டம் இன்றி நடமாடியதை காணக்கூடியதாக இருந்தது. சுகந்திரபுரத்தில் இருந்து வெளியேறிய நாட்களில் முதியோர் இல்லத்துக்கு சொந்தமான லமாஸ்ரர், உந்துருளி, முச்சக்கர வண்டி தளபாடங்கள் உட்பட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கைவிட்டு வெளியேறினர்.
இவ் முதியோர் ,இல்லம் தவிர மேலும் பல முதியோர் இல்லங்கள் இப் போர் பகுதியில் சிக்கிக்கொண்டு போரின் இறுதி வரை பல இன்னல்களை சந்தித்தனர்.( இது தொடர்பானவை இனி வரும் அங்கங்களில் தொடரும்……..)
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/