செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சீனாவில் ஆரம்பமாகியது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

சீனாவில் ஆரம்பமாகியது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

1 minutes read

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் நேற்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.

91 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீன ஜனாதிபதி  ஜிங் பிங் ஆரம்பித்து வைத்தார்.

கண்கவர் நடனங்களுடனும் வான வேடிக்கைகளுடனும்  சீன தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள  பேர்ட்ஸ் நெஸ்ட் விளையாட்டரங்களில் ஆரம்பமாகியுள்ள இப்போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகளில் சீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நோர்வே, இங்கிலாந்து, ஜேர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.

முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பப்போவதில்லை என கூறி புறக்கணித்துள்ளன.

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 1,581 வீரர்கள் மற்றும் 1,290 வீராங்கனைகள் அடங்களாக, மொத்தமாக 2,871 பேர் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.