திரிஷா, அஜீத்துடன் இணைந்து நடித்துள்ள என்னை அறிந்தால் படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள், டப்பிங் பணிகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், படம் விரைவில் வெளிவர தயாராக இருக்கிறது.
இதுதவிர ஜெயம் ரவியுடன் திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்’ படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மற்றும் ஜெயம் ரவியுடன் இணைந்து மேலும் ஒரு படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆக்ரா சென்ற திரிஷா அங்கு யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள காதலின் சின்னமான தாஜ்மகாலை கண்டுகளித்தார். இதற்காக தனியாக ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து தனது தோழிகளுடன் சென்று சுற்றிப் பார்த்துள்ளார்.
இதுகுறித்து திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தாஜ்மகால் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். மேலும், தாஜ்மகாலை அழகையும் வர்ணித்துள்ளார்.