மீளவும் உபயோகிக்கக்கூடிய மின்சக்தி உற்பத்தியை 2030 ஆம் ஆண்டளவில் 450 கிகா வொட்ஸ் என்ற அளவுக்கு உயர்த்தும் இலக்ைக இந்தியா அடையும் என்று இந்திய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூழல் மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கிளாஸ்கோ மாநாடு ஞாயிறன்று நடைபெறவுள்ளதையடுத்து அமைச்சர் இது தொடர்பாக இந்தியா ஆற்றவுள்ள நடவடிக்ைககள் தொடர்பாக தகவல்கள் வெ ளியிட்டுள்ளார்.
சூழல் மாற்றம் தொடர்பான போராட்டத்தில் இந்தியா முன்நிலை வகிப்பதாகவும் 2030 இல் தன் இலக்ைக அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு ஜி-20 நாடுகளில் உறுதியான முன்னேற்றங்களை கண்டு வரும் நாடாக இந்தியா விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.