இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi, இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஹைதரபாத் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நேற்று (24) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சீன வௌிவிவகார அமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலுக்கு பின்னர், சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர், முதன்முறையாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இந்த மோதலில் 20 இந்திய படையினர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா செல்வதற்கு முன்னர், சீன வௌிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஆப்கானிஸ்தானில் அவர் தலிபான்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்திய விஜயத்தை அடுத்து சீன வௌிவிவகார அமைச்சர் இன்று மாலை நேபாளத்திற்கு செல்லவுள்ளார்.