குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலும்பு நீக்கிய கோழி இறைச்சி – 500 கிராம் உருளைக்கிழங்கு – 250 கிராம்
இஞ்சி, பச்சை மிளகாய் – தலா 10 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
எண்ணெய் – 100 மில்லி
ரொட்டித்தூள் – 50 கிராம்
கறிவேப்பிலை – தேவைக்கு
உப்பு, மிளகுதூள் – தேவையான அளவு
செய்முறை:
இறைச்சியை நன்கு சுத்தம் செய்து அரைத்து கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி கறிவேப்பிலையுடன் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.
அடுத்து அதில் உருளைக் கிழங்கு, அரைத்த இறைச்சி, மிளகுதூள், உப்பு ஆகியவற்றை அவற்றுடன் சேர்த்து அனைத்தும் நன்றாக கலந்தவுடன் இறக்கி ஆற வைத்து உருண்டை பிடித்து வட்டமாக தட்டி வைத்து கொள்ள வேண்டும்.
ரொட்டித் தூளை அதன் மீது தூவவும்.
பின்னர் தோசை கல்லில் எண்ணெய் விட்டு தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு இருபுறமும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் கட்லெட் ரெடி.
நன்றி | மாலை மலர்