தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் வசூல் சக்கரவர்த்தி என்றெல்லாம் கூறப்படும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியான மறுநாளே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டதற்கு காரணம் கேஜிஎப் திரைப்படம்.
இத்திரைப்படம் வெளியாகிய இரண்டு வாரத்திற்குள் கோடிகளை வசூலில் அள்ளிவிட்டது இன்னும் வசூல் வேட்டை முடியவில்லை தொடர்கிறது.
இந்திய சினிமாவின் மிக பெரிய வணிக ரீதியிலான திரைத்துரையான ஹிந்தி திரையுலகம் கேஜிப்பினால் மிரண்டு போயிருக்கிறது.
கேஜிஎஃப் 2′ படத்தின் வெறித்தனமான வசூல் வேட்டையால், ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான ‘ரன்வே 34’ திரைப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அடி யை வாங்கியுள்ளது.
‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம், 21 நாட்களிலேயே வசூலில் ஹிந்தியில் 1000 கோடியை கடந்த முதல் படம் எனும் பெருமை பெற்ற அமீர்கானின் ‘தங்கல்’ படத்தை ஓரங்கட்டி சாதனை படைத்துள்ளது.
‘பாகுபலி 2’ திரைப்படம் ஹிந்தியில் மட்டும் 510.99 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதற்கு அடுத்ததாக அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் 387.38 கோடி ரூபாயை இருந்து வந்தது. ஆனால், படம் வெளியான 21 நாட்களிலேயே இந்த சாதனையை தகர்த்தெறிந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படம் 391.65 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
‘பாகுபலி 2’ திரைப்படம் மொத்த வசூல் ரூ. 1810 கோடி, ‘, ‘கே.ஜி.எப். 2’ படம் இதுநாள் வரையில் மொத்த வசூல் ரூ. 1,056 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு இந்திய முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இதையடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த ஏப்ரல் 14-ஆம் திகதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கே.ஜி.எப். 2’ படம் வெளியானது.
ரசிகர்கள் எதிர்பார்த்ததுப் போன்றே, படத்தின், சண்டைக் காட்சிகள், வசனங்கள், இசை என அனைத்தும் ‘கே.ஜி.எப். 2’ படத்தில் மிரட்டலாக இருந்தது.
இதனால், இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது இந்தப் படம். முதன்முதலாக தென்னிந்தியாவை சேர்ந்த கன்னட மொழிப் படம் ஒன்று, பல்வேறு மொழிகளை பேசும் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.
இன்று கேஜிஎப்பின் வெற்றி மூலம் உலகளவில் ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடும் ரொக்கிபாய் அதாவது கதையின் நாயகன் யாஷ் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய மான காரணிகளில் ஒருவர் . இந்த வெற்றிக்கு பின் அவரது கடுமையான உழைப்பு மறைந்திருக்கிறது.
தென்னிந்திய சினிமாக்களில் கடைசி இடம் என்றால் அது கன்னடம் தான் . திறமைகள் ரீதியாகவும் சரி , வியாபார ரீதியாகவும் சரி .
ஆனால் , இதையெல்லாம் உடைத்து எறிந்த திரைப்படம்தான் கே.ஜி.எப் திரைப்படம் .
தமிழ், தெலுங்கு , மலையாளம் என்ற மற்ற தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் 2018 ஆம் ஆண்டு சவாலாக அமைந்தது கே.ஜி.எப் .அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர் .
இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி வசூல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முன்பு , ஒரு தனியார் விருது வழங்கும் மேடையில் கன்னட நடிகர் யாஷ், “கன்னட சினிமாவும் ஒருநாள் இந்தியாவில் பெரிதாக பேசப்படும்” என்று உரக்க பேசினார்.
அவர் பேசியபோது அங்கிருந்த பல திரைத்துறை பிரபலங்களுக்கும், பல இந்திய மொழி பேசும் சினிமா ரசிகர்களுக்கும் யாஷ் என்பவர் யாரென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி யஷ் பேசிய பிறகு அவரது நடிப்பில் உருவான ‘கே.ஜி.எஃப்’ படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
வெளியான அனைத்து மொழிகளிலும் யாஷ் நடித்த ‘கே.ஜி.எப்’ படத்தைப் பார்த்தவர்கள் ரசித்தனர்.
‘பாகுபலி’க்குப் பிறகு இந்தியா முழுவதும் வெற்றியைக் கண்ட ஒரு படமாக ‘கே.ஜி.எப் சாப்டர் 1’ மாறியது. கன்னட சினிமாவின் பிஸினஸ் என்பது ‘கே.ஜி.எஃப்’ படம் வெளியாகுவதற்கு முன்பாக 50 கோடியாக இருந்தது.
ஆனால், ‘கே.ஜி.எஃப்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூல் ஈட்டியது. தற்போது வெளியாகியுள்ள‘கே.ஜி.எஃப் 2’-1000 கோடியை கடந்து விட்டது.
கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டும் ‘ராக்கிங் ஸ்டார்’ என்று அறியப்பட்டு கொண்டாடப்பட்ட யாஷ், தற்போது இந்தியா முழுவதும் இந்தியா தாண்டியும் கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பத்து வருடத்திற்கு மேலான உழைப்பு இருக்கிறது.
ஹஸன் மாவட்டத்திலுள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நவீன் குமார் கௌடா என்னும் யாஷ். இவருடைய தந்தை கர்நாடகா அரசு பஸ் ட்ரைவர், தாய் குடும்பத் தலைவி.
மைசூரில் பியூசி படிப்பை முடித்த பின்னர், நடிப்பின் மீது ஆர்வத்தின் காரணமாக பெங்களூருவிலுள்ள ட்ராமா ட்ரூப் ஒன்றில் இணைந்துகொண்டு நடிப்பைக் கற்றுக்கொண்டார்.
ஒரு நேர்காணலில் எப்படி நீங்கள் சாதாரணமாக இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னுடைய அப்பா ஒரு பஸ் ட்ரைவர்.
நான் இவ்வளவு சம்பாதித்தும் இன்றும் அவர் பஸ் ட்ரைவராக பணிபுரிகிறார். இதுதான்…” என்று பதிலளித்தார்.
‘கே.ஜி.எஃப்’ ரிலீஸ் சமயத்தில் ராஜமௌலி இந்த பட விழாவில் கலந்துகொண்டபோது, “நான் கேள்விபட்டேன் இன்றும் யாஷ்ஷின் தந்தை பஸ் ட்ரைவராக பணிபுரிகிறார்.
என்னைப் பொறுத்தவரை யஷ் ஹீரோ அல்ல, அவரது தந்தைதான் ஹீரோ” என்றார்.யஷ் ஒரே இரவில் நடிகராக நடிக்கத் தொடங்கி கன்னட சினிமாவின் உட்சநட்சத்திரமாக மாறவில்லை.
தொடக்கத்தில் டிவி சீரியலில் நடித்தார். அதன் மூலம் கவனம் பெற்றவர். அதன்பின் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து, பின்னர் ஹீரோவாகி கன்னட சினிமாவில் தனக்கான சாம்ராஜ்யத்தைப் பிடித்தார்.
விவசாயிகளுக்கு, உதவி தேவை என்பவர்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை யஷோ மார்கோ அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறார்.
கொப்பல் மாவட்டத்தில் வறட்சியினால் கஷ்டப்பட்டு வந்த விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க, சுமார் நான்கு கோடி செலவில் ஏரியை தூர்வாரி கொடுத்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் கர்நாடகா – தமிழ்நாடு என்றாலே காவிரி பிரச்சனை, மொழி பிரச்சனை போன்றவை நினைவுக்கு வரும்.
யஷ் தமிழ்நாட்டிற்கு ‘கே.ஜி.எஃப்’ பட புரோமோஷனுக்காக வந்த சமயத்தில் அவர் தெளிவான தமிழில் பேசி தமிழ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.