மீனுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாவிட்டால், மீன்பிடி தடைக்காலத்தை அமுல்படுத்த வேண்டாமென தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
61 நாட்கள் தடைக்காலம் நிறைவுற்றதன் பின்னர், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 130 விசைப்படகுகளில் 2000-இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர்.
எதிர்பார்த்ததை விட தமக்கு அதிகளவு மீன்கள் கிடைத்ததாக தூத்துக்குடி மீனவர்கள் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளனர்.
இன்னுமொரு புறத்தில் மீனுக்கு நிர்ணய விலை இல்லாவிட்டால், தடைக்காலத்தை அமுல்படுத்த வேண்டாம் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 700-இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.