மன்னார் “பிறிச்சிங் லங்கா” (Bridging Lanka ) கடந்த 4 ஆண்டுகளாக மன்னார் நகரசபையின் நகரஅவிவிருத்தி திட்டங்கள்ளுக்கு உதவிபுரிந்துவருவது யாவரும் அறிந்ததே, இதன் செயற்பாடுகள் “மன்னாரின் மறுமலர்ச்சி 22” திட்டத்தின் ஊடாக, அரச அதிபர் , பிரதேசசெயலாளர்கள், நகரசபை போன்றோரின் ஆலோசனையுடன் செயற்பட்டுவருகின்றது.
குறிப்பாக 1998ன் பின் மன்னார் நகர நில அமைப்பு வரைபடம் புதுப்பிக்கப்படவில்லை இதனை பிறிச்சிங் லங்கா, மொறட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கொழும்பு நகர அபிவிரித்தி சபை (UDA) போன்றவர்களின் உதவியுடன் ஆறு மாதத்தில் ஆய்வு செய்து, 2013ம் ஆண்டின் தரைத்தோற்ற அமைப்பின்படி புதிய நிலஅளவு வரைபடத்தை கூகுல் இணையதளத்தி;ல் தரவேற்றம் செய்துள்ளது. இதில் பழைய, புதிய கட்டிடங்கள், பாதைகள், குளங்கள், தரிசுநிலங்கள், வணக்கஸ்தலங்கள், அரச, பொதுக் கட்டிடங்கள், போன்றன துல்லியமாக அடையாளமிடப்பட்டுள்ளது.
இவை அரச அதிகாரிகளுக்கும் குறிப்பாக மன்னார் நகரசபைக்கும் வரிஅறவிடல் சம்பந்தமாகவும், புதிய நவீன கட்டிடங்கள் அமைப்பதற்கும், குளங்களைப் புனரமைப்பதற்கும், புதியவீடமைப்புத் திட்டங்கள் உருவாக்குவதற்கும் பெரிதும் பிரயோசனமாக அமையும். 2013 வரைபடம் இலங்கையில் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது இதில் மன்னாரும் ஒன்றாகும்.
அரச அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க UNOPS ஸ்தாபனமும், பிறிச்சிங் லங்காவும், நகரசபையும் இணைந்து கடந்த 1945ம் ஆண்டில் மன்னார் நகரசபைக்குரிய 36 குளங்களை அண்மையில் ஆய்வுசெய்து, அதன் பின்னர் 2015ம் ஆண்டு 26 குளங்களை; இனங்கண்டுள்ளது. இக்குளங்கள் கடந்த 30 வருடங்களாக யாரும் சொந்தம் பாராட்டாது காணப்பட்டதுடன், தற்போது அரச அதிபரின் முயற்சியினால் 24 குளங்கள் நகரசபைக்கும் 2 கமநலசேவைத் திணைக்களத்திற்கும், மன்னார் பிரதேச செயலாளர் மூலமாக கையளிப்பதற்கு அரச அதிபர் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றார்.
மன்னார் நகர சபை இக்குளங்களுக்கு வரைபடம் வரைவதுடன் எல்லைகளை அமைத்து தற்போது இருக்கும் தரைத் தோற்றத்துடன் புனரமைப்புச் செய்யவேண்டும் எனவும் அடாத்தாக பிடித்தவர்களுக்கு சட்டநடவடிக்கை மூலம் குளக்காணிகளை மீட்டு குளங்களைப்பேண வேண்டும் என வரியிறுப்பாளர்கள் விரும்புகின்றனர்.
மன்னாரில் உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காக கீரிக் கடற்கரையில் உல்லாசப் பயணிகள் விடுதி உரிமையாளர்கள் அமைப்பு, (Mannar Guest house Association) மன்னார் மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் விவசாய சம்மேளனமும்,(Mannar District Chamber of Commerce) மன்னார் நகரசபையும், பிறிச்சிங் லங்காவும், இணைந்து 2 ஏக்கர் கடற்கரைக் காணியைத் துப்பரவு செய்து, எல்லைகள் இட்டு, பாதுகாப்பான சுகாதாரமுள்ள தூய கடற்குளியலுக்கு ஏற்ற இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும் இவ்விடத்தில் ஆடைகள் மாற்றவும், மலசலகூடம், நன்னீரில் குளிப்பதற்கும், சிற்றுண்டிவசதிகளும் கொண்ட ஓர் கட்டிடத்தை அமைக்க உல்லாசப் பயணிகள் விடுதி உரிமையாளர்கள் அமைப்பு முன்வந்துள்ளது. அத்துடன் மீண்டும் தலைமன்னாரிலிருந்து ஆதாம் பாலம், மற்றும் தீடைகளை பார்வையிட உல்லாசம் பயண படகுசேவையும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
உல்லாசப் பயணிகளைக் கவரும் முகமாக மன்னாரில் உள்ள 18 உல்லாசப் பயணிகள் தங்கும் விடுதிகளின் விபரகோவை, மன்னாரில் உள்ள முக்கிய 26 சுற்றுலாத்தலங்கள், போக்குவரத்து வாகனவிபரங்கள் அவற்றின் கட்டணங்கள், விடுதிகளில் வழங்கப்படும் உணவுகள் சம்பந்தமாகவும் உல்லாசப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கான ஆங்கிலம் பேசக்கூடிய வழிகாட்டிகள் (Guides) போன்றவற்றின் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கும்(Update) தகவல் கையேடுகள் தயாரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
நகரஅபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு வீதிச் சுற்றுவட்டங்களை (Round about) அமைப்பதற்கு நகரசபையிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் மன்னார் விளையாட்டரங்குச் சந்தியில் பழைய நீர்த் தாங்கி உடைத்து அகற்றிய பின் பொதுவிளையாட்டரங்கின் மூலையில் உள்ள மதிலை 25அடி உள்ளெடுப்பதன் மூலம் நவீன சுற்றுவட்டம் ஒன்றை வீதி அவிவிருத்தி அதிகாரசபையின் உதவியுடன் அமைக்கலாம் எனவும், அடுத்த சுற்றுவட்டம் தொலைத்தொடர்பு நிலையச் சந்தியில் அமைப்பதன் மூலம் புகையிரதப் நிலையப் பாதையை நவீனமயப்படுத்தலாம் என வரியிறுப்பாளர்கள் விரும்புகின்றனர்.
மேலும் 2013ல் நகரவரியிறுப்பாளர்கள் 500 க்கு மேற்பட்டவர்கள், அரச, அரசசார்பற்ற ஸ்தாபன உத்தியோகத்தர்கள், நகர சபை, உள்ளுராட்ச்சி உதவி ஆணையாளர், கொழும்பு நகரஅபிவிருத்தி சபை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து நகரஅபிவிருத்தி சம்பந்தமாக திட்டங்கள் தீட்டி அதைப் புத்தகவடிவில் வடிவமைத்து மக்கள் நலன் கருதி அமுல்படுத்துவதற்காக அரசஅதிபர், மன்னார் பிரதேசசெயலாளர், மன்னார் நகரசபை, கொழும்பு நகரஅபிவிருத்தி சபை, உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு 2014 மாசி மாதத்தில் வழங்கியுள்ளார்கள் அவற்றை அமுல்படுத்துவதற்கு நகர வரியிறுப்பாளர்கள், மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் உரிய திணைக்களங்களுக்கு உந்துதல் வழங்குமாறு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மன்னார் நகர எல்லைக்குட்பட்ட சாந்திபுரக் கிராமம் வருடாந்த மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டுமக்கள் துன்புறுவதை அவதானித்த முன்னைய பிரதேச செயலாளர் பிறிச்சிங் லங்காவின் உதவியைக் கோரியபோது, வெளிநாட்டு, உள்நாட்டு திட்டஆய்வாளர்கள் மூலமும், UNOPS அனுசரணையுடனும், பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் (DMC) போன்றவர்களின் உதவியுடன் 3 வருட புனர்வாழ்வுத் திட்டம் ஒன்று தீட்டப்பட்டு அரசஅதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது.
சாந்திபுரம் பாடசாலை ஆசிரியர்கள், கற்விகற்கும் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மழைகாலங்களில் 2 மாதங்கள் வெள்ளத்திற்குள் நடந்து மலசலகூடம் செல்வதைத் தவிர்ப்பதற்காக, 250 மீற்றர் நடைபாதை ஒன்றை சாந்திபுரம் RDS, WRDS உதவியுடன் பிறிச்சிங் லங்கா அமைத்துக் கொடுத்துள்ளது.
சாந்திபுரம் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டு மைதானத்தைச் சுற்றி மரங்கள் நடுவதற்கும், பார்வையாளர்கள் படிக்கட்டு அமைப்பதற்கு பிறிச்சிங் லங்கா நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சாந்திபுரம் யுவதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வுநேரங்களில் விளையாடுவதற்காக பட்மின்ரன் கோட்(Badminton Court) அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
சாந்திபுரம் சிறுவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அக்கிராமத்தில் நவீன சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு நகரசபையின் உதவியுடன் பிறிச்சிங் லங்கா நடவடிக்கை எடுத்துவருகின்றது.
சாந்திபுரம், புகையிரத நிலைய மக்களின் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக இன்னும் ஆறு மாங்களில் மன்னாருக்கும், தலைமன்னாருக்கும் புகையிரதசேவை ஆரம்பிக்கப்பட்டபின் பலவேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கு நகர சபை, பிரதேச செயலாளரின் உதவியுடன், 25 முச்சக்கர வண்டி தரிப்பிடங்களும், பேரூந்து நிலையம், கடைத் தொகுதிகள், விடுதிகள், புகையிரதத்திற்குள்ளும், புகையிரத நிலையத்திலும், சிற்றுண்டிகள் விற்பதற்கும், பொதிகள் இறக்கி ஏற்றுவதற்கு கூலித் தொழிலாளர்களும் , இந்தியாவில் இருந்துவரும் உல்லாசப் பிரயாணிகளை வழிகாட்டுவதற்கு வழிகாட்டிகள் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னார் பொதுமக்கள் இவற்றை நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் வெளியார் இவ்வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும் தலைமன்னார் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டபின் இந்திய இலங்கைக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதன் மூலம் ஆசியவீதி என அழைக்கப்படும் இந்தியா, தனுஸ்கோடி, பாம்பன் பாலம், தலைமன்னார் இறங்குதுறை, சாந்திபுரம், மன்னார், கொழும்பு பாதைகள் பிரசித்தமடைய வாய்ப்புகள் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு சாந்திபுர, புகையிரத நிலைய மக்களுக்கு போதிய பயிற்சிகளை அளிப்பதன் மூலம் சாந்திபுர நுழைவாயிலில் மரங்களை நட்டும், வீதி விளக்குகளை அமைத்தும், பாதைகளை அகலப்படுத்தி செப்பனிட்டும், குப்பை கூழங்களை அகற்றியும், கட்டாக்காலி மிருகங்களையும், வீதிகளில் மீன்பிடிவலைகளை காயப்போடுவதைத் தடைசெய்தும் நுழைவாயிலை அழகுறப்படுத்த முடியும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மன்னாரில் கட்டாக்காலிகளாகத் திரியும் 500க்கு மேற்பட்ட கழுதைகளுக்கும், வீதி நாய்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கும் முகமாக கருத்தடைசெய்தல், உணவளித்தல், காயங்களைக் குணப்படுத்தல், மிருகங்கள் மூலமாக மனநலம் பாதிப்புற்றோருக்கான சிகிச்சை அளிப்பதற்காக இந்திய, ஐக்கியராட்சிய கழுதைகள் நலன் பேணும் சங்கங்களுடன் இணைந்து கடமையாற்றி வருகின்றது. இதில் ஓர் அங்கமாக முருங்கனில் அமைந்துள்ள உளநல ஆற்றுப் பிரிவில் சிகிச்சையளிப்பதற்கும் சிகிச்சை நிலையம் ஒன்றை ஆசியாவில் முதல் தடவையாக மன்னாரில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் புதுக்குடியிருப்பில் கழுதைகள் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் கடந்த ஒருவருடமாக மன்னார் மரக்கறிச் சந்தையில் தேவையற்ற மரக்கறிக் கழிவுகளையும், தலைமன்னார் வீதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் உள்ள தேவையற்ற உணவுகளையும் நாளாந்தம் சேகரித்து கட்டாக்காலிக் கழுதைகளுக்கு உணவூட்டுவதன் மூலம் மிருக பராமரிப்பு காருண்ய சேவையை பிறிச்சிங் லங்கா ஆற்றிவருகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்ட விதைவை பெண்களின் மறுவாழ்விற்காக மாந்தைப் பிரதேச செயலாளரின் திட்டத்திற்கு அமைய பாப்பாமோட்டைக் கிராமத்தில் அரிசி, சிறுதானியங்கள் அரைக்கும் ஆலை ஒன்றை 2014ம் ஆண்டில் அமைத்துக் கொடுத்ததன் மூலம் 8 தாய்மார்கள் மாதாந்த வருமானம் பெற்றுவருகின்றார்கள். அத்துடன் அடம்பன், மடு பிரதேசங்களில் “மகளீர் மன்னா உணவகம்,” மூலம் காலை, மதிய, இரவு உணவுகள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் 10 தாய்மார்கள் வருமானம் பெற்றுவருகின்றனர். குறிப்பாக அண்மையில் மடு திருப்பதிக்கு விஜயம் செய்த திருத்தந்தையின் வருகையின் போது 1000 ற்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டில் இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிலையத்திற்கு நிதி உதவி வழங்கியதன் மூலமும், விடத்தல்தீவு, மன்னார், உயிலங்குளம், போன்ற இடங்களில் கணணிப் பயிற்சிகளை நடத்தியதன் மூலமும் பல இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சியும், வேலைவாய்ப்பும் பெற்றுக் கொடுத்துள்ளது.
அத்துடன் மன்னார் மூர் வீதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனக் காரியலயத்தில் “ஆங்கிலம் கற்போர்வாரீர்”திட்டத்தின் கீழ் நாளாந்தம் பிற்பகலில் 4.00 – 5.00 மணிவரை இலவசமாக ஆங்கிலப் பேச்சுத் திறன், விளையாட்டுக்கள், வாசிகசாலை. போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக இதில் அப்பகுதியிலுள்ள முஸ்லீம், இந்து, சிறார்கள் 25 ற்கு மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்படிசேவைகளுக்கு பிறிச்சிங் லங்கா தலைமையின் கீழ் கடமையாற்றுவதற்காக “மன்னார் மறுமலர்ச்சி 2022” நம்பிக்கை நிதிய உறுப்பினர்களாக அரச, அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள், மதபிரதிநிதிகள், கல்விமான்கள் போன்வர்களைக் கொண்ட நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பணிப்பாளராக திரு.ஜெரமி லியனகேயும், தலைவராக திரு. ஜேம்ஸ் யேசுதாசன் (உப தலைவர், நகர சபை) கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்களின் நலன் கருதி மேற்படி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கிய அவுஸ்திரேலிய பிறிச்சிங் லங்காவுக்கும், இலங்கை நன்கொடையாளர்களுக்கும் ஆக்கபூர்வமான உதவிகள் நல்கிய அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் பிறிச்சிங் லங்கா சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Australian Medical Student volunteers with MMT Trustee
BL Staff meeting with Australian delegates
BL Tourist inspect Mannar Heritage, The Old Dutch Fort guard Room
BL tourist Inspect, Thalai Mannar Beach & Fishing site
The Guest houses in Mannar Island
1. Palmyrah House 2. Golden Rest 3. Four Tees Rest Inn 4. Baobab Guest House
5. Hotel Ahash 6. Mannar Guest House 7. Holiday Guest House
8. Manjula Inn 9. Swiss Hotel 10. Star Guest House
Other Guest Houses in Mannar
1. Shell Coast Resort http://shellcoastresort.com/ – currently under construction
2. M J M Golden Guest Inn, 62 Esplanade Road, Moor street, Mannar town, 023-2250494
3. Nelson Guest House, 58 Esplanade Road, Mannar town, 077-0869623
4. Rathushan Guest Inn, New Moor Street, Mannar, 077-9749270, 071-0444033, 078-5278091
5. Lucky Guest house, 44 Thalvupadu Road, Mannar, 071-4973460
6. YMCA, 15 Hospital Road, Mannar town. 023-2222159
7. Co-operative Guest Inn, 5 Field Street, Mannar town, 023-2222850
Keeri Beach Shiramadana, Guest house Association members, MMT Members & Volunteers.
BL Animal care programme especially to Feral donkeys.
Mannar Land use Survey map showing the 15 GSN area Buildings
திரு. சின்கிலேயர் பீற்றர் | மன்னாரிலிருந்து வணக்கம் லண்டனுக்காக