செவ்வாய் கிரக பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட, 100 பேரில், மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.அடுத்து, பல கட்ட தேர்வுக்குப் பின், 2024ம் ஆண்டு, நான்கு பேர் செவ்வாய்க்கு பயணம் மேற்கொள்வர்.நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.இப்பயணத்திற்காக, 2,02,586 பேர் விண்ணப்பத்தனர். அவற்றுள், பல கட்ட தேர்வுக்குப் பின், 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், அமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர், தரண்ஜித் சிங், 29 இடம் பெற்றுள்ளார்.மேலும், துபாயில் வசிக்கும் இந்தியரான ரித்திகா சிங், 29, கேரளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத், 19 ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.இறுதிக்கட்ட தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, செவ்வாய் கிரகம் போன்ற செயற்கை வடிவமைப்புள்ள கோளில், ஏழு ஆண்டுகள் கடுமையான பயிற்சி அளிக்கப்படும்.
செவ்வாய் கிரக பயண திட்டத்தின் கீழ், 40 பேர் நிரந்தரமாக அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
3