அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 87-வது ஆஸ்கர் விருது வழங்கும்விழா நடைபெறுகிறது.
விப்ளாஸ் என்ற படத்தில் நடித்த ஜே.கே. சிம்மன்ஸ்க்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படங்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. சிறந்த படங்களுக்கான பட்டியலில் அமெரிக்கன் ஸ்நிப்பர், தி இமிடேஷன் கேம், பேர்ட்மேன், செல்மா, பாய்வுட், தி தியரி ஆப் எவரிதிங், தி கிராண்ட் படாபெஸ்ட் ஹோட்டெல், விப்லாஷ், உள்ளிட்ட 8 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் பேர்ட் மேன் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம் உட்பட 9 பரிந்துரைகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.